வாழ்க்கையில்ஒருமுறை மட்டும்
காதல் பூப்பதில்லை!
ஏனெனில்....
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
என் நெஞ்சில்
புதிதாய் பூக்கிறது 'காதல்'...
அன்று உன்னோடு
பேசியபோது காதலில்லை;
அன்று உன்னோடு
பழகியபோது காதலில்லை;
அன்று உன்னை
தொட்டபோது காதலில்லை;
ஆனால்,
இன்று
நாமிருவரும் தீட்டப்படாத
காதல் காவியத்தின்
நாயகர்களாய்!
எப்பொழுதிலிருந்து?...