Tuesday, July 28, 2009

வாழ்க்கையில்
ஒருமுறை மட்டும்
காதல் பூப்பதில்லை!
ஏனெனில்....
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
என் நெஞ்சில்
புதிதாய் பூக்கிறது 'காதல்'...


மூன்றாம் பிறை

என் காதலி
என்று சந்தேகித்த
நிலவின்
முகம் கிழிந்தது
உனது
நட்பின் முத்தத்தால்.........

உன் அமைதிக்காக


அந்த புயல் காத்திருக்கவில்லை


உன் அழகிற்காக


அந்த மழை காத்திருக்கவில்லை


உன் மௌனத்திற்காக


இந்த காலம் காத்திருக்கவில்லை



என்றென்றும்


உனக்காக காத்திருக்கிறேன்


'காதல்' என்ற வார்த்தைக்காக.........

பிரிவிலும் வாசமுள்ள
நம் காதலை கண்டு
என் கவிதையும்
(சு)வாசிக்க தொடங்கிற்று - 'காதலை'....
இருட்டில்
கண்ணாமூச்சி ஆடும்
நம் காதலுக்கு
என் கவிதையால்
ஒளி கொடுக்கிறேன்....
உன் முகம் பாராமல்
உன் கூந்தலில் மலர்ந்த
பூக்கள்கூட மாலையில்
வாடிவிடுகின்றன!
நானோ!
எத்தனை நாட்கள்
எத்தனை மாதங்கள்
உன் எதிர்நின்றும்
கண்மூடித் தவிக்கின்றேன்?

இதோ
என்னுடைய வற்றாத
கண்ணீர் பூக்கள்
வாடாத
உன் மனதிற்காக.......



காதல் வந்த காலம் எது?

அன்று உன்னோடு

பேசியபோது காதலில்லை;

அன்று உன்னோடு

பழகியபோது காதலில்லை;

அன்று உன்னை

தொட்டபோது காதலில்லை;

ஆனால்,

இன்று

நாமிருவரும் தீட்டப்படாத

காதல் காவியத்தின்

நாயகர்களாய்!

எப்பொழுதிலிருந்து?...

தோழன்

கடமைக்காக ஒருவன், தந்தை
உறவுக்காக ஒருவன், தமையன்
ஆசைக்காக ஒருவன், காதலன்
உரிமைக்காக ஒருவன், கணவன்
கடமையின்றி,
உறவின்றி,
ஆசையின்றி,
உரிமையின்றி
உனக்காக இன்னொருவன், தோழன்........

Wednesday, May 6, 2009

காதலின் சாபம்....


இது என்ன சாபமடி ?
கனவில் கூட
நம் காதல்
பிரிந்தே வாழ்கிறது

Tuesday, May 5, 2009

ஒரு முறை

பேச நினைத்தேன்,

பேசிய பிறகு

ஒவ்வொரு முறையும்

பேச துடித்தேன்...........

நட்பென்ற
கிழிந்த காகிதத்தில்
"காதல்"
என்னும் கவிதை வரிகள் ......